அழகுக்காக அறுவை சிகிச்சை: மறுக்கும் ரகுல்

1 mins read
0b1dc004-06d5-493b-97fe-232eba17132d
ரகுல் பிரீத் சிங். - படம்: ஊடகம்

திரையில் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக தாம் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

அவ்வாறு தாம் ஒருபோதும் நினைத்தது இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. ஏனென்றால் கடவுள் எனக்கு அழகிய முகத்தைக் கொடுத்துள்ளார்.

“அதேசமயம் நான் அழகை மேம்படுத்தும் சிகிச்சைக்கு எதிரானவள் அல்ல. அழகாக காட்சியளிக்க யாராவது அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறில்லை,” எனத் தெரிவித்துள்ளார் ரகுல்.

தென்னிந்தியப் படங்களில் நடித்து, முன்னணி கதாநாயகியாக உயர்ந்த இவர், தமிழில் ‘தடையற தாக்க’, ‘என்னமோ ஏதோ’, ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இந்தியன்-2’, ‘அயலான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தியில் அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைந்து ‘தே தே பியார் தே-2’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்