விக்ரம் உழைப்பு பிரமிக்க வைக்கும்: ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்

விக்ரம் உழைப்பு பிரமிக்க வைக்கும்: ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்

1 mins read
34ca8fd1-45a6-470c-88cf-23fa01724069
‘தங்கலான்’ படக் காட்சியில் சியான் விக்ரமுடன் கலைஞர்கள். - படம்: ஊடகம்

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் முன்னோட்டக் காட்சியும் ‘மினிக்கி மினிக்கி’ பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன், படத்தில் இடம்பெற்ற நடிகர்களின் தோற்றமும் ஆடை அணிகலன்களும் கவனம் ஈர்த்துள்ளன.

இவற்றை வடிவமைத்தவர் ஏகன் ஏகாம்பரம். கெமிக்கல் டை, பிளாஸ்டிக், மெட்டல் இப்படி எதையும் பயன்படுத்தாமல் அத்தனை பேரின் ஆடைகளையும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்ததாகச் சொல்கிறார்.

‘தங்கலான்’ படத்தில் பயன்படுத்திய ஆடைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, எந்த தீங்கையும் ஏற்படுத்தாத சாயங்கள் என்றார் ஏகன் ஏகாம்பரம்.

பழங்குடியினரின் ஆடைகளுக்கு விலங்குகள், பறவைகளின் உரோமங்கள், இறகுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், செயற்கையான முறையில் அவற்றை தயார் செய்ய வேண்டியிருந்தது.

வசம்பு, பாக்கு ஆகியற்றைக் கொண்டு கம்மல், நகைகள் என இயற்கையான முறையில் ஆபரணங்களை வடிவமைத்தோம். விக்ரம் முதல் அனைத்து கலைஞர்களும் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தி உள்ளனர். ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் மூலிகைச் செடிகள், பழங்கள், விதைகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த சாயங்களைக் கொண்டே ஆடைகளை உருவாக்கினோம்.

“படப்பிடிப்பில், விக்ரம் சாரின் உழைப்பு பிரமிக்க வைத்தது. கடும் வெயில், பனி என எல்லா நேரத்திலும் ஒரேவிதமான ஆடையோடு அவர் இருப்பார். காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அவ்வளவு மெனக்கெடுவார். அவருடைய உழைப்பு நிச்சயம் பேசப்படும்,’’ என்கிறார் ஏகன் ஏகாம்பரம்.

குறிப்புச் சொற்கள்