தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் விரைவில் ‘சூர்யா 44 ’ படத்தில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் ஏற்கனவே ஜெயராம் நடித்து வரும் நிலையில், அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் இணைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ‘கோட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரசாந்த் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

