‘நேரமின்மையால் பல படங்களில் நடிக்க முடியவில்லை’

1 mins read
c2a4b73c-7cc1-47b8-95a1-4fe43c18df39
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

நேரமின்மை காரணமாக தம்மால் பல படங்களில் நடிக்க முடியவில்லை என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

வெற்றிமாறன் இயக்கத்தில், இவரும் சூரியும் இணைந்து நடித்துள்ள ‘விடுதலை 2’ படம் டிசம்பர் 20ஆம் தேதி திரைகாண உள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, அவர் பல படங்களில் நடிக்க முடியாமல் நல்ல வாய்ப்புகளைத் தவிர்க்க நேர்வதாகக் குறிப்பிட்டார்.

“நான் தற்போது சில படங்களில் நாயகனாக நடிக்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறேன். நேரமின்மையால் சில படங்களைத் தவிர்க்க நேரிடுகிறது.

“மேலும் சில படங்களின் கதை நன்றாக இருந்தாலும் அவற்றில் எனக்கான கதாபாத்திரம் வலுவாக இல்லை என்பதும் நான் படங்களைத் தவிர்க்க முக்கிய காரணமாக உள்ளது,” என்கிறார் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்