நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமணப் பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி புதன்கிழமை (நவம்பர் 27) தீா்ப்பளித்தாா்.
நடிகா் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வா்யாவை நடிகா் தனுஷ் 2004ல் காதலித்து மணந்தாா். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக 2022ல் அறிவித்தனா்.
தொடா்ந்து இருவரும் விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரில் முன்னிலையாகும்படி மூன்று முறை உத்தரவிட்டும் இருவரும் முன்னிலையாகாததால், அவர்கள் சேர்ந்து வாழப்போவதாக தகவல் பரவியது.
இவ்வழக்கு கடந்த நவம்பர் 21ஆம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னிலையான தனுஷ், ஐஸ்வா்யாவிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தினாா்.
பின், இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி அவர்கள் இருவருக்கும் ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதைத் தொடர்ந்து, “எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்,” எனத் தெரிவித்தனா்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற திருமணப் பதிவை ரத்து செய்வதாகவும் நீதிபதி சுபாதேவி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்த காணொளித் தொகுப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 18ஆம் தேதி வெளியான காணொளியில் தனுஷ் தயாரிப்பில் உருவான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த காட்சிகளை தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர் பார் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

