தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் வீரர் ரெய்னாவின் புதிய படம்; சென்னை வரும் டோனி

1 mins read
9f97f740-6bfe-46e7-95ad-d0cafcdb8a4c
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி (இடது), சுரேஷ் ரெய்னா. - படம்: ஐபிஎல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடி தமிழக கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா புதிய தமிழ் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை டி.கே.எஸ். என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சரவணக்குமார் தயாரிக்கிறார். லோகன் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் சிவன் இசை அமைக்க சந்திப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

அறிமுக விழாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை அழைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டோனி ஏற்கனவே தயாரிப்பாளராக அறிமுகமாகி தமிழில் எல்.ஜி.எம். என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவை நடிகராக அறிமுகப்படுத்த டோனி சென்னைக்கு வரவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்