உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’

உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’

படம்: ஐஏஎன்எஸ்லைவ்.இன்

08 May 2026 - 6:34 pm

1 mins read

‘அழியாத கோலங்கள் 2’, ‘ட்ரீம் கேர்ள்’ படங்களை இயக்கிய எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கிள் கேப்’.

நவாஸ், ஷெர்ரி அகர்வால் நடித்துள்ள இப்படத்தின் கதை, காதலையும் இசையையும் மையமாகக் கொண்டது.

படம் குறித்து இயக்குநர் பாரதி கூறுகையில், “‘சிந்து பைரவி’, ‘முகவரி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்களில் காதலும் இருந்தது, இசையும் இருந்தது. இந்தப் படமும் அதேபோன்ற உணர்வுபூர்வமான காதல் கதைகளின் வரிசையில் இருக்கும்.

“வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. அதை இதில் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறோம். உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’.

“இதில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுகளுக்குப் பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீனக் காட்சியமைப்புகளுடன் இருந்தாலும் உணர்வுபூர்வமான இசையும் படத்தில் இருக்கும்.

“புதுமுகம் சதீஷ் பத்மநாபன் இசையமைக்கிறார். நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன், கவுஷிக் ஸ்ரீதரன் பாடியிருக்கிறார்கள்,” என்கிறார்.

குறிப்புச் சொற்கள்
இயக்குநர்திரைப்படம்இசைபுதுமுகம்காதல்