தாதா சாகேப் பால்கே அனைத்துலக திரைப்பட விழா 2026 விருதுகள் அறிவிப்பு

தாதா சாகேப் பால்கே அனைத்துலக திரைப்பட விழா 2026 விருதுகள் அறிவிப்பு

படங்கள்: தினமணி

21 Nov 2026 - 7:28 pm

2 mins read

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே அனைத்துலகத் திரைப்பட விழா 2026க்கான விருதுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக நடிகர் கமல்ஹாசனும் இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக இளையராஜாவும் கௌரவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடலுக்காக சாண்டி மாஸ்டர் சிறந்த நடன இயக்குநராகத் தேர்வாகியுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களைப் பொறுத்தவரை, ‘துரந்தர்’ திரைப்படம் பல முக்கியமான விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. அப்படத்துக்காகச் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (ஆதித்யா தார்), சிறந்த நடிகர் (ரன்வீர் சிங்), சிறந்த வில்லன் (அக்‌ஷய் கன்னா), சிறந்த இசையமைப்பாளர் (சஷ்வத் சச்தேவ்), சிறந்த தயாரிப்பாளர்கள் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகையாக அனீத் பத்தா (‘சயாரா’) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்ற சிறந்த திரைப்படமாக ‘காந்தாரா சாப்டர்-1’ தேர்வாகியுள்ள நிலையில், அப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றுள்ளார்.

மேலும், சிறந்த துணை நடிகராக வினீத் குமாரும் (‘சாவா’), சிறந்த நகைச்சுவை நடிகராக ரிதேஷ் தேஷ்முக்கும் (‘ஹௌஸ் ஃபுல் 5’) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இணையத் தொடர்கள் (ஓடிடி) பிரிவில், ‘தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ சிறந்த இணையத் தொடராகவும் அதனை இயக்கிய ஆர்யன் கான் சிறந்த இயக்குநராகவும் தேர்வாகியுள்ளனர்.

‘பாட்டல் லோக் சீசன் 2’ தொடருக்காக ஜெய்தீப் அஹ்லாவத் சிறந்த நடிகராகவும் ‘தில்லி கிரைம் சீசன் 3’ தொடருக்காக ஷெஃபாலி ஷா சிறந்த நடிகையாகவும் விருது பெறுகின்றனர்.

அனைத்துலகப் பிரிவில், ‘அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்’ சிறந்த அனைத்துலகத் திரைப்படமாகவும் உலகத் திரையுலகில் சிறந்த பங்களிப்புக்காக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் சிறந்த அனைத்துலகக் கலைஞராகப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்