நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ஏற்கெனவே சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது தந்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்க உள்ளாராம். படத்தின் இயக்குநர் யார் என்பது உள்ளிட்ட பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
“நாடகங்கள்தான் சினிமாவுக்கு முன்னோடி. அதனால்தான் எனது மகளை முதலில் சின்னத்திரை நாடகங்களில் நடிக்கவைத்து, அனுபவம் பெறச்செய்தேன். இப்போது திரையுலகில் களமிறக்குகிறேன்.
“இப்படத்துக்கான கதையை எழுதி முடிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. தமிழ்த் திரையுலகில் இதுவரை கூறப்படாத, வித்தியாசமான கதையாக இது அமையும்,” என்கிறார் லிவிங்ஸ்டன்.
தனது தந்தையைப் போலவே சினிமாவில் தனக்கும் நல்ல இடம் கிடைக்கும் என நம்புவதாகவும் இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் சொல்கிறார் ஜோவிதா.