இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கோல்கத்தாவைச் சேர்ந்த கிடார் இசைக்கலைஞரான மோகினி டேவும் (படம்) ஒரே நாளில் தங்கள் திருமண முறிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ரகுமான் மனைவி சாய்ரா பானு, தன் கணவரைப் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் அதை உறுதிசெய்தார் ரகுமான்.
இந்நிலையில், ரகுமான் இசைக்குழுவில் பணியாற்றும் மோகினி டேவும் தன் கணவரைப் பிரிவதாக அறிவித்தார்.
இதனால் ரகுமானும் மோகினி டேவும் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா இந்தத் தகவலை மறுத்துள்ளார்.
“மோகினியின் அறிவிப்புக்கும் ரகுமான், சாய்ராவின் பிரிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
“சாய்ரா பானு நன்கு யோசித்து எடுத்துள்ள முடிவு இது,” என்று வழக்கறிஞர் வந்தனா ஷா தெளிவுபடுத்தி உள்ளார்.