தீபிகா படுகோன் கடின உழைப்பாளி: நடிகை டயானா பென்டி

1 mins read
90c9e214-b34f-42e9-b030-ac4b90a832f4
‘காக்டெய்ல்’ படத்தில் தீபிகா படுகோன் (இடது), டயானா பென்டி, சயிஃப் அலிகான். - படம்: இணையம்

மும்பை: இவ்வாண்டு வெளியான ‘சாவா’, ‘ஆசாத்’ படங்களால் ரசிகர்களை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி, பிரபல நடிகை தீபிகா படுகோனைப் பாராட்டியிருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவை படமான ‘காக்டெய்ல்’ மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் டயானா பென்டி. இப்படத்தில் அவருடன் தீபிகா படுகோன், சயிஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தீபிகாவுடன் பணியாற்றியதைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவர்,

“எனது முதல் படத்தில் எனக்கு எதுவும் தெரியாத காலங்களில் தீபிகா, சைஃப் அலிகான் இருவரும் ஆதரவாக இருந்தனர். நான் தீபிகாவுடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி, மிகவும் அர்ப்பணிப்புள்ளவர்,” என்றார் டயானா பென்டி.

டயானா தற்போது ‘டூ யூ வான்ன பார்ட்னர்’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். இதில் இவருடன், தமன்னா, ஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி, நீரஜ் கபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘டூ யூ வான்ன பார்ட்னர்’ இணையத் தொடரைத் தற்போது சில பகுதிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா