மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை தீபிகா படுகோன் 2018ஆம் ஆண்டில் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார் அவர். இறுதியாக கல்கி படம் வெளியானது.
இதற்கிடையே, இம்மாத இறுதியில் அவருக்குக் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 7ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலரும் தீபிகாவுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனின் மகள் தீபிகா படுகோன். தனது தந்தை விளையாட்டு வீரராக இருந்தாலும் தனக்கு சினிமாதான் பொறுத்தமானது என்பதை முடிவு செய்து அதனையே தேர்ந்தெடுத்தார் தீபிகா.
டென்மார்க்கில் பிறந்த அவர் 2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு, 2007ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அவர் பாலிவுட் உலகிற்கு அறிமுகமானார்.

