சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’.
நவம்பர் 14ஆம் தேதி திரைக்குவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி நடந்தது.
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ‘கைதி-2’ படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது என்றும் இப்படத்தில் டில்லியும் ரோலக்சும் நேருக்கு நேர் சந்திக்கப் போகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதன்மூலம், கைதியில் சூர்யாவும் கார்த்தியும் இணையப் போவது உறுதியாகியுள்ளது.
மேலும், ரஜினியின் ‘கூலி’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ‘கைதி-2’ படத்தைத் தொடங்கப்போகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

