ஜித்து மாதவன் படத்தில் நடிக்க ஆசை: மோகன்லால்

1 mins read
b0b1a597-3bf2-42d4-a074-cc9e0fc86871
தனது 360வது படமான ‘துடரும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் மோகன்லால். - படம்: சமூக ஊடகம்

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், தனது 360வது படமான ‘துடரும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்படத்தை, ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘சவுதி வெள்ளக்கா’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில், மோகன்லால் இயக்கி நடித்துள்ள ‘பரோஸ்’ படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் இதன் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, மோகன்லால் தமது அடுத்த படத்தை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“ஜித்து மாதவன் படத்தில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது, அது இப்போது நடக்கவுள்ளது,” என்றார் மோகன்லால்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்