மறு வெளியீட்டில் மீண்டும் சாதித்த ‘தேவதூதன்’

1 mins read
f7214c0b-3945-494c-9f8c-bb074c4a7b35
‘தேவதூதன்’ படத்தில் மோகன்லால். - படம்: ஊடகம்

தென்னிந்திய திரையுலகில் இப்போது மறு வெளியீடு சீசன் போலிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவான பல படங்கள் அடுத்தடுத்து மறுவெளியீடு கண்டு வருகின்றன.

அந்த வகையில், மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘தேவதூதன்’ என்ற படம் மறு வெளியீடு கண்டு 50 நாள்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து மோகன்லால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இந்தப்படம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்