‘எல்லம்மா’ பட நாயகனாக அறிமுகமாகும் தேவி ஸ்ரீ பிரசாத்

‘எல்லம்மா’ பட நாயகனாக அறிமுகமாகும் தேவி ஸ்ரீ பிரசாத்

2 mins read
efbee1b2-9bcf-4ccf-a07a-f538b3861d90
தேவி ஸ்ரீ பிரசாத். - படம்: தினத்தந்தி
multi-img1 of 2

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ‘எல்லம்மா’ திரைப்படத்தின்மூலம் கதாநாயகனாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.

தமிழில் ‘சச்சின்’, ‘சிங்கம்’, ‘வீரம்’, ‘கங்குவா’ எனப் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ‘புஷ்பா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனைத்துலக அளவில் கவனம் பெற்றார்.

தற்போது தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்திற்கும் இவரே இசையமைத்துவரும் நிலையில், நடிகராக அவதாரம் எடுக்கும் செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பலகாம்’ திரைப்படத்தை இயக்கிய வேணு யெல்டாண்டி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

‘ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்’ சார்பில் தில் ராஜு, சிரிஷ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இதில் ‘பார்சி’ என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்து நீண்ட நாள்களாகப் பல்வேறு யூகங்கள் நிலவிவந்தன.

தொடக்கத்தில் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் இப்படத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மிருணாள் தாக்கூர், ‘ஹாய் நன்னா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

தற்போது அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்