தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய படங்களில் நடிக்க தனுஷுக்குத் தடை

2 mins read
40793d74-b664-4035-a364-6a304476d49e
‘இளையராஜா’ படத்தில் தனுஷ். - படம்: ஊடகம்

முன்பே ஒப்பந்தமான படங்களில் மட்டுமே தனுஷ் நடிக்க வேண்டும் என தனுஷுக்கு தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்லா இயக்கத்தில் ‘குபேரா’வில் நடிக்கிறார் தனுஷ்.

மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தில் இளையராஜாவாகவே நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘ராயன்’ படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. மேலும், ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ்.

ஏற்கெனவே, இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். விரைவில் திரைகாணும் எனக் கூறப்படுகிறது.

அண்ணன் செல்வராகவன் இயக்கவுள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ்.

இத்தனை படங்களைக் கைவசம் வைத்திருந்தாலும், தனது ‘இட்லி கடை’ படத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.

தமிழ் சினிமா பல்வேறு வர்த்தகச் சிக்கல்களில் சிக்கியுள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி (முன்னாள் தலைவர் இராம.நாராயணன் மகன்).

ஆனால், சங்கத்தில் நிலவும் பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்காக, தனுஷுக்கு தடை உள்ளிட்ட தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் செய்வதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

சரியான காரணம் இல்லாமல் மற்றவர்களுக்குத் தொழில் தடை விதிப்பது, சட்டத்துக்கு எதிரான செயல்பாடு என்பது தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்குத் தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் திரைப்படச் சங்க முன்னாள் தலைவரான கே.ஆர்.

குறிப்புச் சொற்கள்