தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித்துடன் மோதும் தனுஷ்

3 mins read
1755e10d-f936-4ad3-95a5-cebe4daefd24
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘இட்லி கடை’ சுவரொட்டிகள். - படம்: ஊடகம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகும் நாளில் தனுஷ் தான் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படைத்தை வெளியிட இருப்பது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வருகிறது என்றாலே மற்ற போட்டி நடிகர்களின் படங்கள் தொடங்கி சிறு படங்கள் என பல படங்கள் பின் வாங்கிவிடும்.

‘வேட்டையன்’ படத்தின் வெளியீட்டு தேதி காரணமாக கடந்த ஆண்டு சூர்யாவின் ‘கங்குவா’ படம் பின் வாங்கியது.

இந்த ஆண்டு அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வெளியாகாத நிலையில், ஏகப்பட்ட படங்கள் ஜனவரி மாதமே வெளியாயின.

இந்நிலையில், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் போட்டியாக தனுஷின் ‘இட்லி கடை’ படம் ஒரே நாளில் மோதுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷுக்கு அஜித்தை பார்த்து எந்தவொரு பயமும் இல்லை என வலை பேச்சு பிஸ்மி பேசியுள்ளதை தனுஷ் ரசிகர்கள் வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித்துடன் மோதும் தனுஷ்: ‘விடாமுயற்சி’ படத்தைவிட இந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் மிகவும் நம்பியிருக்கும் படமாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தைக் கண்டு தனுஷ் சிறிதும் பயப்படாமல் தனது ‘இட்லி கடை’ படத்தை அதே ஏப்ரல் 10ஆம் தேதி வெளியீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அஜித்தை பார்த்து எல்லாம் தனுஷ் ஒரு போதும் பயப்படமாட்டார் என்றும் அதற்கு ஒரு காரணம் உண்டு என பிஸ்மி பேசியுள்ள காணொளி தீயாக பரவி வருகிறது.

இட்லி கடை வெல்லும்: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வணிக ரீதியாக எப்படி இருந்தாலும் இந்த 2025ல் ‘இட்லி கடை’ என்ற தலைப்பில் தனுஷ் ஒரு படம் இயக்கி, நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் கதை மீது அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை தான் காரணம் என பிஸ்மி வெளிப்படையாக கூறியுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படத்துடன் தனுஷின் ‘இட்லி கடை’ மோதினால் வசூல் பாதிக்கும் என அஜித் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், துணிச்சலுடன் தனுஷ் தனது படத்தை இயக்குகிறார் என்றால் நிச்சயம் அந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்கிறார் பிஸ்மி.

ஆனால், அதே தனுஷ் தனது இயக்கத்தில் தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்தியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் வெளியீட்டை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்துடன் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் இயக்கிய படம் வெற்றி பெறுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் பின்னர் தனுஷ் தனது ‘இட்லி கடை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றும் நிலையும் உருவாகலாம் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி இல்லை என்றால் அந்த படத்தின் வசூலும் நிச்சயம் பாதிக்கப்படுவது உறுதி என்றும் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்