தனுஷுக்கும் முன்னணிப் பட நிறுவனத்துக்கும் இடையே மோதல் வெடித்திருப்பதாகத் திடீரென ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார் தனுஷ். இயக்குநர் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் படப்பிடிப்பை எப்போது தொடங்கலாம், எங்கு நடத்தலாம், என்பதைப் பற்றி பேசி முடிவெடுத்துவிட்டனர்.
தனுஷுக்கு எவ்வளவு சம்பளம் என்று பேசத் தொடங்கிய போதுதான் பஞ்சாயத்து தொடங்கியதாம். அந்தப் படத்தில் நடிக்க, லாபத்தில் சரிபாதி பங்கு தரவேண்டும் என்று தொடக்கத்தில் கூறிய தனுஷ், திடீரென மனம் மாறிவிட்டாராம்.
தனக்கு ரூ.65 கோடியை ஊதியமாகத் தர வேண்டும் என்று கராராகச் சொன்னதைக் கேட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியாகிவிட்டது. எனினும் தரமான கதை, நல்ல கதைக்களத்தை விட்டுவிட தனுஷுக்கு மனம் வரவில்லை.
அதனால் அந்தக் கதையைத் தாமே தயாரிக்கலாம் என்று முடிவு செய்தாராம். இதற்கு அவர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. அதைக்கேட்டு தனுஷ் அணுகியபோது அந்த நிறுவனம் வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாகத் தகவல்.
இருதரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் கசிந்தாலும் யாரும், எதையும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. எனவே உரிய விளக்கத்தை வெளியிடுமாறு தனுஷ் தரப்பில் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

