பாலாவின் நாயகனை இயக்கும் தனுஷ்

1 mins read
ce206f4a-ea07-405e-aba9-f042e89a04c4
நடிகர் அருண் விஜய். - படம்: ஊடகம்

தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

தற்போது ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், இயக்குநராக மட்டுமே பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, மீண்டும் படமொன்றை இயக்கவுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நாயகனா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பது தெரியவில்லை. தனுஷ் படத்தில் நடிப்பதற்கு அருண் விஜய்க்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்புக்கு செல்வதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார் தனுஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்