காலஞ்சென்ற இந்திய அதிபர் அப்துல் கலாமின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தனுஷ்.
அண்மையில் இப்படத்தின் விளம்பர, அறிமுகத்துக்கான புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்ட தனுஷ், அப்துல் கலாமின் உடல் மொழியுடன் தமது நடிப்பும் நூறு விழுக்காடு அளவுக்கு இயல்பாக இருக்க வேண்டும் என்ற நினைப்புடன் செயல்பட்டதாகத் தகவல்.
புகைப்படங்களை எடுத்து முடித்த பிறகு அவற்றைப் பார்த்த எல்லோருமே வியப்புக்கு ஆளாகினர். தனுஷ் அச்சு அசலாக அப்துல் கலாம் போலவே காட்சியளிப்பதாகக் கூற, தனது தேர்வு பொய்த்துப் போகவில்லை என்று இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கூறியுள்ளார். இவர் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கியவர்.
தயாரிப்புத் தரப்பும் தனது நண்பர்களும் வெவ்வேறு நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டபோதும், கலாம் படத்தில் தனுஷ்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் ஓம் ராவத்.
இதற்கிடையே, அப்துல் கலாமின் உறவினர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளாராம் தனுஷ். அப்போது கலாமின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டறியவும் அவர் திட்டமிட்டுள்ளார்.