தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ‘குபேரா’ மகா சிவராத்தியன்று வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.
சேகர் கம்முலா இயக்கும் இந்தப் படத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் சுவரொட்டி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா கதாபாத்திரங்களின் காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.