கேரள மாநிலத்தைச் சேர்ந்த நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இவர் அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான ‘ஓகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு நித்யா, தனுஷுடன் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ வெளியானது. அப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.
‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக நித்யா மேனன் தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.
இந்நிலையில் தான் மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக நித்யா மேனன் அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தை தனுஷ் இயக்கப்போவதாகவும் நித்யா மேனன் கூறியதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

