நடிகர்கள் சிலரை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. கடந்த ஆண்டு திரைத்துறையில் நடக்கும் போதை கலாசாரம் பற்றி பேசி சலசலப்பை உண்டாக்கினார். தற்பொழுது ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி விவாகரத்து குறித்து யூடியூப்பில் சுசித்ரா பேசி இருப்பது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் பேசியதாவது, “ஜெயம் ரவி என்று அழைக்கப்படும் ரவி மோகன் ஆர்த்தியைக் காதலிக்கும்போது, ஆர்த்தி தன்னை வேறொருவராக காட்டிக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மாறிவிட்டார்.
“தனுஷுடன் ஆர்த்திக்கு தொடர்பு இருந்தது. இந்த அநியாயத்தை பார்த்தும் பலர் வாயை மூடிக்கொண்டிருந்தனர். ரவி மோகன் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு ஆர்த்தி விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். அப்படி சென்றபோது தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாகி இருக்கின்றனர். இந்த விஷயம் ரவி மோகனுக்கு தெரிந்த பிறகு ஆர்த்தியை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.
“ஆர்த்தி தனது மகன்களை வைத்து ரவி மோகனை மிரட்டி வருகிறார். ரவி மோகன் தனது மகன்களை சந்திக்க ஆர்த்தி அனுமதிப்பது இல்லை. பாதுகாவலர்களுடன் மகன்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் ஆர்த்தி.
“இது சில பணக்கார பெண்களின் செயல். ஆர்த்தியும் அவரது குடும்பமும் சேர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பணம் கொடுத்து ரவி மோகன், கெனிஷா பற்றி அவதூறு பரப்புகின்றனர்.
மகன்களின் காணொளியை வெளியிட்டு அனுதாபம் தேடி வருகிறார் ஆர்த்தி. கெனிஷா மிகவும் அப்பாவி. அவர் ரவி மோகனின் நிலையை என்னிடம் எடுத்து சொல்லி, ரவி மோகனின் மனவலியை தன்னால் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டார். தற்போது அவர்கள் ஒன்றாக இருக்கின்றனர்,” என்று சுசித்ரா பேசியுள்ளார்.
ரவி மோகன், ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ்தான் காரணம் என்று அவர் பேசியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.