தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருண் விஜய் படத்துக்கு பாடிய தனுஷ்

1 mins read
44e4757f-06e9-4cbf-9498-194986582f5a
தனுஷ். - படம்: இந்திய ஊடகம்

அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

பிடிஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘ரெட்ட தல’.

இப்படத்துக்காக தனுஷ் பாடலொன்றை பாடியிருக்கிறார். இப்பாடலை வெளிநாட்டில் காட்சிப்படுத்த படக்குழு தயாராகி வருகிறது.

விரைவில் தனுஷ் பாடியிருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

‘இட்லி கடை’ எனும் படத்தை தனுஷ் இயக்கி, நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அருண் விஜய்.

‘இட்லி கடை’ டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பை வைத்து ‘ரெட்ட தல’ படப் பாடலைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரெட்ட தல’.

இதில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தான்யா ரவிச்சந்திரன், சித்து இதனானி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்