முதன்முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளார் தனுஷ்.
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 51வது படமாக உருவாகிறது ‘குபேரா’.
இதில் நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை எற்றுள்ளனர்.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாட, அண்மையில் ஒலிப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தனுஷ் நடித்த ‘குட்டி’, ‘வேங்கை’ ஆகிய படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
எனினும், அவரது இசையில் ‘குபேரா’ படத்தில்தான் முதன்முறையாக தனுஷைப் பாட வைத்துள்ளார்.