தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண விருந்தில் தனுஷ், சிம்பு, நயன்

1 mins read
9150f144-fbf4-4e4a-a587-572c21e1e7b7
திருமண விருந்தில் கலந்துகொண்ட சிம்பு, தனுஷ். - படம்: ஊடகம்

‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமண விருந்தில் தனுஷ், சிம்பு, நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நயன்தாரா, தனுஷ் மோதலுக்குப் பிறகு முதன்முதலாக இருவரும் ஒரே விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள், காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தை ஆகாஷ் பாஸ்கர்தான் தயாரிக்கிறார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு நடந்த திருமண விருந்தில் நடிகர் தனுஷ், சிம்பு கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் பரவி வருகின்றன.

சிம்பு, தனுஷ் இடையே எப்பொழுதும் ஒரு பகையும் போட்டியும் போட்டி இருக்கும் என திரையுலகில் இருப்பவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அதை எல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில் ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து விழாவில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்