‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டீஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதுதான் அந்தத் தகவல். இவர் ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து சிம்புவுடன் ‘பத்து தல’ படத்தில் நடித்த டீஜே, தற்போது ‘தளபதி 69’ல் இணைந்திருக்கிறார்.
அந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜுவுக்கு ஜோடியாக டீஜே நடித்து வருகிறாராம்.
“விஜய் சாரின் கடைசிப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யார்தான் வேண்டாம் என சொல்வார்கள். அதனால் ஓகே சொன்னேன்,” எனக் கூறியுள்ள டீஜே, தான் சிறுவயதில் இருந்தே விஜய்யின் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும் தற்போது அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது கனவுபோல் உள்ளதாகவும் கூறி உள்ளார்.