கதைகளை அடுக்கும் தனுஷ்: ஒதுக்கித் தள்ளும் ஆலியா

1 mins read
ca4644e0-743f-4d32-84d4-31f30faa383f
ஆலியா பட், தனுஷ். - படங்கள்: ஊடகம்

ஆறு புதுப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தனுஷ்.

மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி, அருண் மாதேஸ்வரன் என அவரை அடுத்தடுத்து இயக்கப் போகும் இயக்குநர்களின் பட்டியல் நீளமாக உள்ளது.

தற்போது இந்தியில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நடித்துவரும் அவர், தமிழில் அடுத்து ‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஜனவரியில் இருந்து மாரி செல்வராஜின் படத்திற்கு வருகிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறாராம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும்.

இந்தி நடிகை ஆலியா பட்டை எப்படியாவது தமிழில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம் தனுஷ்.

இரண்டு கதைகள் சொல்லியும் ஆலியாவுக்குப் பிடிக்கவில்லை. ஆலியாவின் தீவிர ரசிகர்களில் தனுஷும் ஒருவர்.

எனவே, அவ்வப்போது தொடர்புகொண்டு தாம் நடிக்கவும் தயாரிக்கவும் முடிவு செய்துள்ள கதைகளை ஆலியாவுக்கு விவரித்து வருகிறார். ஆனால், பாலிவுட் நாயகியின் சம்மதம்தான் கிடைத்தபாடில்லை.

குறிப்புச் சொற்கள்