தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் தனுஷ்

1 mins read
e457b958-6568-42c1-97cf-599203732243
தனுஷ். - படம்: ஊடகம்

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ டிசம்பர் இறுதியில் திரை காண்கிறது.

இந்நிலையில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம், ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா படம், ‘லப்பர் பந்து’ படத்தை இயக்கிய தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அவற்றுள் தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் படத்தை, தனுஷ் தற்போது இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தைத் தயாரிக்கும் ஆகாஷ் தயாரிக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்