தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படப்பிடிப்பை முடித்த தனுஷ்

1 mins read
220d89e3-1347-41e2-b798-0df32e09ceb0
‘இட்லி கடை’ படப்பிடிப்புக் குழுவினருடன் தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷ், நித்யா மேனன் நடித்த ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாக அறிவித்து உள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4வது படமாக ‘இட்லி கடை’ உருவாகி உள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்புப் பணி நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புப் பணிகள் பேங்காக்கில் நடைபெற்றது. அங்கு அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்றும் பதிவிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்