தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித்திடம் பதுங்கி, சிவாவிடம் பாயத் துடிக்கும் தனுஷ்

2 mins read
95911366-7347-4735-b547-55544b1ce033
சிவகார்த்திகேயனைப் பழிவாங்கும் வகையில் ‘இட்லி கடை’ படத்தை தனுஷ் உருவாக்கியிருப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். - படங்கள்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 51வது படம் ‘இட்லி கடை’. இப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது படமும்கூட. தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் அப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இப்படம் திரைக்குவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்படலாம் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் வெளிவரும் ‘குட் பேட் அக்லி’ படமும் அதே தேதியில் திரைக்கு வரவுள்ளது. அது தெரிந்தும் அதே தேதியில் ‘இட்லி கடை’ படத்தையும் வெளியிடலாம் எனப் படக்குழு முன்னர் முடிவுசெய்திருந்தது.

இதை அறிந்த தனுஷ் ரசிகர்கள் அஜித்தை மிகவும் மோசமாக சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தனர். அதிலும் குறிப்பாக அஜித்தின் கடைசிப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமையவில்லை. அப்படி இருக்கும்போது, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் அஜித்தின் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வரும் என்றெல்லாம் மோசமாக பதிவிட்டனர். இதனால், அஜித் ரசிகர்கள் கோபமடைந்தனர். இருக் குழுவினரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் ‘டீசர்’ வெளியாகி இணையத்தில் பரவலானது. ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர். அப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் உறுதியானது.

இதனால், தனுஷ் தரப்பில் ‘இட்லி கடை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘குட் பேட் அக்லி’ படத்துடன், தனது படத்தை வெளியிடுவது முன்னணி நடிகருக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்காது என தனுஷ் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி ‘இட்லி கடை’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடலாமா என்ற யோசனையிலும் அவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையில் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் போக்கு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ முன்னரே ‘கேப்டன் மில்லர்’ படத்திற்குப் போட்டியாக களமிறங்கிய ‘அயலான்’ படம் வெற்றிக் கண்டது. இந்த முறை ஒருவேளை இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் சிவகார்த்திகேயனைப் பழிவாங்கும் வகையில் ‘இட்லி கடை’ படத்தை தனுஷ் உருவாக்கியிருப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்