அஜித்தை இயக்கவிருக்கும் தனுஷ்

அஜித்தை இயக்கவிருக்கும் தனுஷ்

1 mins read
b8a3bc66-0735-44fc-925c-426879206380
அஜித்தை விரைவில் சந்தித்து படத்தின் கதையைக் கூறயிருக்கும் தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகத் தகவல்க வெளியாகியுள்ளது.

அப்படம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனந்த் எல்.ராய் படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

மேலும், தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரது படங்களிலும் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அஜித்தை தனுஷ் இயக்கும் தகவல்கள் ஏற்கெனவே வெளியானபோதிலும் அதனை தனுஷ் தரப்பு முதலில் மறுத்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அதனை உறுதிசெய்திருக்கிறார். அஜித் - தனுஷ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கக் கட்டத்தில் இருப்பதாக நேர்காணல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

விரைவில், அஜித்தைச் சந்தித்து தனுஷ் படத்தின் கதையை கூறவிருப்பதாகவும் அஜித் சென்னை திரும்பியவுடன் அச்சந்திப்பு நடக்குமெனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்