நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஒற்றைப் பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலில் பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ள எஸ் ஜே சூர்யா, இந்தப் பாடலில் நடனமாடிய பிரியங்கா மோகனுக்கும் இந்தப் பாடலில் சில வரிகளை எழுதியுள்ள தனுஷ் மகன் யாத்திராவுக்கும் தன்னுடய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்து வரும் தனுஷ், அவரது படங்களில் பாடல்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அண்மையில் இவருடைய இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் இவர் எழுதிய அடங்காத அசுரன் பாடல் ரசிகர்கள் மத்தியில் பரவலானது.
அதேபோல் தனது மகனையும் பாடலாசிரியராக அறிமுகம் செய்துள்ளார் தனுஷ். இதனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஒற்றைப் பாடல் வெளியான பின்னர், யாத்திராவுக்குத் திரையுலகில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

