இந்தியில் உருவான ‘துரந்தர்’ படம் 30 நாள்களில் ரூ.1,240 கோடி வசூல் கண்டு சாதனை படைத்துள்ளது.
ரன்வீர்சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்ஜய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியானது.
ரன்வீர் சிங் ஜோடியாக, பட நாயகியாக நடித்துள்ள சாரா, தமிழில் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
இந்திய உளவு அமைப்பான ‘ரா’ மேற்கொண்ட ஒரு ரகசியப் புலனாய்வு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது.
எனினும், படத்தின் கதை பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, ஆறு நாடுகளில் இந்தப் படத்தை வெளியிடத் தடை செய்தனர். எனினும், வசூல் ரீதியில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
திரைக்கு வந்த 30 நாள்களில் இப்படத்தின் வசூல் ரூ.1,240 கோடியை எட்டியுள்ளதாகப் படக்குழுவினர் ஒரு சுவரொட்டியை வெளியிட்டு அதிகாரபூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவில் ரூ.968 கோடியும் வெளிநாடுகளில் ரூ.272 கோடியும் வசூல்கண்டு சாதித்துள்ளது ‘துரந்தர்’.

