சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக ஒப்பந்தமானது தெரிந்த தகவல்தான்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
முன்னதாக, ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாட அணுகியபோது ஸ்ரீலீலா மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், அவர் சிவாவுடன் இணைந்து நடிக்க சம்மதித்திருப்பது விஜய் ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளது.
ஆனால் ஸ்ரீலீலாவோ, தாம் விஜய் படத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கால்ஷீட் பிரச்சினையால்தான் அவரால் விஜய்யுடன் குத்தாட்டம் போட முடியவில்லையாம். அதன் பிறகே, திரிஷா அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமானார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவா, அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.