தன்னுடைய தந்தை மிகப் பெரிய சாதனையாளர் என்று ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“அவர் இத்தனை ஆண்டுகளாக என்ன பங்களித்தார் என்பது குறித்து நான் கருத்து சொல்லவில்லை. அவர் சம்பாதித்துள்ள மரியாதை, அன்பு ஆகியவற்றை முன் வைத்தே இவ்வாறு கூறுகிறேன். என் தந்தையைப் பற்றி தவறான, ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
“பிறரது வாழ்க்கை குறித்து பேசும்போது அதில் உள்ள உண்மையின் முக்கியத்துவம் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டும். என் தந்தையின் கண்ணியத்தையும் அனைவரிடமும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்,” என அமீன் தன் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

