இந்தியத் திரைப்பட ரசிகர்களை காதல் வலையில் மீண்டும் விழவைக்க 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' திரைப்படம் இந்தியா முழுவதும் மறுவெளியீடு காண்கிறது..
ஷாருக்கான், கஜோல் நடித்த இந்தப் படம் 1995ஆம் ஆண்டு வெளியானது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி பெரிய அளவில் படம் மறுவெளியீடு செய்யப்படுவதாக யாஷ் ராஜ் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. படம் ஒரு வாரம் திரையிடப்படும் என்றும் அது சென்னை, மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட 37 நகரங்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ரசிகர்களின் ஆசைக்கு இணங்க படத்தை மறுவெளியீடு செய்ததாக யாஷ் ராஜ் படத் தயாரிப்பு நிறுவனம் கூறியது. இந்திய வரலாற்றில் அதிக நாள்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

