‘டிராகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, சிம்புவை வைத்து படம் இயக்கும் அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறார்.
தனுசுடன் இவர் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் அடிப்படையில் நடிகர் சிலம்பரசனின் ரசிகன்தான். ஆனால் எனக்கு நடிகர் தனுஷையும் பிடிக்கும்.
“அவரை அண்மையில் சந்தித்தபோது ஒரு கதையைச் சொன்னேன். அது காதல், அடிதடி, திகில் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட கதை. மற்றும் திரில்லர் கலந்த கதையைக் கொண்ட படம் ஆகும்” என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
இதற்கிடையே, இவர் இயக்கிய ‘டிராகன்’ படத்தின் வசூல், அஜித்தின் ‘விடா முயற்சி’ பட வசூலை முந்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

