மகாபாரத இதிகாசத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட படைப்பை இயக்கப் போவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
அபிமன்பு, அர்ஜுனன் என்ற தலைப்புகளில் இரு பாகங்களாக இப்படம் உருவாக உள்ளது என்றும் 700 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மகாபாரதப் போர்க் காட்சிகளை மிக உயிரோட்டமாக திரையில் கொண்டுவர இன்றைய நவீன தொழில்நுட்பம் வெகுவாகக் கைகொடுக்கும்,” என்கிறார் லிங்குசாமி.

