இயக்குநர் மாரி செல்வராஜ் அண்மையில் ஜப்பான் சென்று திரும்பியுள்ளார்.
அவர் அடுத்து இயக்கும் புதுப் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வேல்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை மாரி இயக்குகிறார். இதில் தனுஷ்தான் நாயகன். இந்தப் படத்துக்கான முக்கியமான காட்சிகளை ஜப்பானில் படமாக்க உள்ளனர்.
நாடு திரும்பிய கையோடு தனுஷிடம் பேசிய மாரி, இப்படத்தின் கதை, திரைக்கதையை முழுமையாகத் தயாரிக்க தனக்கு ஏழு மாத கால அவகாசம் தேவைப்படும் எனக் கேட்டுக்கொண்டாராம்.
சற்றே தாமதமானாலும் தரமான படைப்பைத் தரக்கூடியவர் என்பதால் தனுஷும் சம்மதித்துவிட்டதாகத் தகவல்.
வெற்றிமாறனைப் போலவே மாரி செல்வராஜும் தனுஷின் நடிப்புக்குத் தீனிபோடும் வகையில் நல்ல கதைக்களத்துடன் கூடிய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் படத் தலைப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.