‘லவ் மேரேஜ்’ படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இயக்குநர் மிஸ்கின் பாடிய பாடல் வெள்ளிக்கிழமை (13.06.2025) வெளியாகி, இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து இருக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எடுடா பாட்டில்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் மிஸ்கின் பாடியுள்ளார். மோகன் ராஜா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.