இயக்குநர் சங்கர்தான் தனக்கு முன்மாதிரி என இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் பண்டிகையின் போது திரைகாண உள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ராஜமௌலி, “பிரம்மாண்ட படங்களை எடுப்பதற்கு என்னை முன்மாதிரியாக கருதுவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பல இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் எங்களுக்கெல்லாம் சிறந்த முன்மாதிரியாக இருந்தது இயக்குநர் சங்கர்தான்.
“பிரம்மாண்ட படங்கள் எடுத்தால் ரசிகர்கள் திரையரங்குக்குப் படையெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்தான் எங்கள் மனதில் ஏற்படுத்தினார். அந்த வகையில் அவர்தான் பிரம்மாண்ட இயக்குநர்,” என்றார் ராஜமௌலி.
இதற்கிடையே, ‘வேல் பாரி’ என்ற நாவலைத் திரைப்படமாக்க தயாராக இருக்கிறாராம் சங்கர்.
அதற்கான திரைக்கதை தயாராகிவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.