நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வருகிறார். அவரது ஒரு சில படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அதற்கான கதை எழுதும் பணியைத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்திற்குப் பிறகு ‘யாமிருக்க பயமேன்’ இயக்குநர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.