தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இந்தியன்-3’ படத்தில் கவனம் செலுத்தும் சங்கர்

1 mins read
baf07cf1-f60d-40f4-b1d7-5f3930dca9c4
‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

சங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அதன் தயாரிப்பாளரான தில் ராஜுவுக்கு ரூ.100 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி என்று முன்பு தகவல் வெளியானது. ஆனால், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம், உலக அளவில் ரூ.194 கோடி மட்டுமே வசூல் கண்டுள்ளதாம்.

‘இந்தியன்-2’ படத்தையடுத்து, ‘கேம் சேஞ்சர்’ படமும் தோல்வி அடைந்துள்ளதால் தற்போது ‘இந்தியன்-3’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம் இயக்குநர் சங்கர்.

குறிப்புச் சொற்கள்