தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் ரஜினியுடன் இணையும் இயக்குநர் சங்கர்

1 mins read
5cd39ddc-7e67-464e-ba92-58a4edffbb5b
ரஜினியுடன் சங்கர். - படம்: ஊடகம்

மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று உலகெங்கும் வெளியீடு காண உள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசினார் சங்கர்.

அப்போது, ‘ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்க வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த இயக்குநர் சங்கர், “ரஜினிக்குப் பொருத்தமான கதை அமைவது முக்கியம். அவ்வாறு அமையும்போது கண்டிப்பாக மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்குவேன்,” என்றார்.

அடுத்து ‘இந்தியன்-3’, ‘வேள்பாரி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சங்கர். அதன் பிறகு அவர் ரஜினியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்