அஜித்துக்கு நன்றி கூறிய ‘விடாமுயற்சி’ இயக்குநர்

1 mins read
780c4ecb-143c-4a02-a4b0-9347f702a9ee
அஜித், மகிழ் திருமேனி. - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்தது.

இது குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும் எங்கள் பணிகளை ஊக்கப்படுத்தும் ஒருவராகவும் எளிமையின் வடிவமாகவும் இருந்தீர்கள்.

“தொடர் முயற்சியால் ஏற்படும் வெற்றிதான் இந்த ‘விடாமுயற்சி’யின் வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து இன்றுவரை நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி,” என்று தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

குறிப்புச் சொற்கள்