தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டெஸ்ட்’ படம் பல கோடி ரசிகர்களைச் சென்றடைய விரும்பிய இயக்குநர்

2 mins read
14ef2814-0095-4535-99a9-a1e8ebcaaabc
‘டெஸ்ட்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

ஒரே நாளில் பல கோடி ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ‘டெஸ்ட்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாகச் சொல்கிறார் இயக்குநர் சசிகாந்த்.

இவர், ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘தமிழ் படம்’, ‘ஜகமே தந்திரம்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர். இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் கதைக்களமாகக் கொண்டு இவர் இயக்கியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின், மாதவன், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், இந்திய உள்ளூர் போட்டிகளில் விளையாடிய தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் 22 பேரும் நடித்துள்ளனராம்.

“திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில்தான் தயாரிப்பாளர் ஆனேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கதைதான் இப்போது திரைப்படமாகி உள்ளது,” என்கிறார் சசிகாந்த்.

இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.

கதைப்படி, சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் பயிற்சியாளராகவும் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய ‘ஹோப்’ என்ற இப்பாடலுக்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

படத்தின் தயாரிப்பாளரும் சசிகாந்த்தான். அவரது ‘வொய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

“கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்தியாவில் எப்போதும் பெரும்பாலான இளையர்களின் ஆதரவு உண்டு. அதனால்தான் எந்த மொழியாக இருந்தாலும் கிரிக்கெட்டை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் படங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் முத்திரை பதிக்கும்,” என்று ‘டெஸ்ட்’ படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்