தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவின் படப்பிடிப்பில் இருந்து கோபமாக வெளியேறிய இயக்குநர்

2 mins read
d6c58e26-671c-452c-94db-dc5102284167
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் சூர்யா. - படம்: ஊடகம்

நடிகர் சூர்யா தன் 45வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு சலசலப்பு குறித்த தகவல் வெளி[Ϟ]யாகி உள்ளது.

சூர்யாவை வைத்து அவரது 45 வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், கோயம்புத்தூரில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது.

சூர்யா 45 படத்திற்காக அண்மையில் ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாம். ஆனால், அந்தக் காட்சிக்கு 400 பேரை மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்ததாம். இதைப் பார்த்து கோபப்பட்ட ஆர்.[Ϟ]ஜே. பாலாஜி, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யாவின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளிவருவது குறைந்து போனது. ஓடிடியில் வந்த அவரது படங்கள் மட்டுமே, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இருப்பினும் பழைய சூர்யாவை அவரது படங்களில் பார்க்க முடிவதில்லை என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதைத் தீர்த்து வைக்கும் வகையில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமானார் சூர்யா. அதில் ஒன்று ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 45வது படமாகும்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வசிகா, யோகி பாபு, ஷிவதா, நடராஜன் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘கங்குவா’வின் தோல்வியில் இருந்து மீள்வதற்கும் கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிப்பதற்கும் ‘ரெட்ரோ’ படமும் இந்தப் படமும் கைகொடுக்குமா என்ற கவலையில் இருக்கிறார் நடிகர் சூர்யா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்