தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து குத்துப் பாடல்களுக்கு அழைக்கும் இயக்குநர்கள்

1 mins read
f07178d7-aede-494a-a82c-16be4ccdd04d
தமன்னா. - படம்: ஊடகம்

இரண்டு படங்களில் குத்துப் பாடல்களுக்கு ஆடியதால் தமன்னாவை அதுபோன்று ஒரு பாடலுக்கு நடனம் ஆட இயக்குநர்கள் அழைப்பதாக கூறியுள்ளார் தமன்னா.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வரும் தமன்னா, தமிழில் ‘அரண்மனை-4’ படத்திற்கு பிறகு தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் தமன்னா.

அதன்பிறகு இந்தியில் ‘ஸ்திரி- 2’ என்ற படத்திலும் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடலும் ‘காவாலா’ பாடலைப் போன்று மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தி சினிமாவில் இருந்து தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், “நான் நடனமாடும் ஒரு பாடல் அந்தப் படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தால் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தமிழில் ரஜினி நடித்த படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதேபோல் இந்தியில் இயக்குநர் என் நண்பர் என்பதற்காக ‘ஸ்திரி- 2’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன்.

அதைப் பார்த்துவிட்டு தொடர்ந்து அதுபோன்று ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாட என்னை இயக்குநர்கள் அழைக்கிறார்கள்,” என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை